தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் பலி! புத்தளத்தில் துயரம்

0 107

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி புத்தளம் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்ததாக மாவட்டச் செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 36 ஆயிரத்து 370 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, 16 தற்காலிக முகாம்களில் 201 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகள், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் என்பன பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை,  வெள்ளத்தால் புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர்.

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் மூவரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் இருவரும், மஹாவெவ மற்றும் வண்ணாத்தவில்லு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொருவருமாக 7 பேர் உயிரிழந்தனர்.

அதுமாத்திரமின்றி, சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்தில் 15 வீடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 97 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.