Developed by - Tamilosai
இந்தியில் இருந்து முதன்` முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழுக்கு கொண்டு வந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மக்களிடையே ரீச் ஆனது. இந்த பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ் வெற்றி வாகை சூடினார். அதனைத் தொடர்ந்து அடுத்தத்தடுத்த சீசன்கள் ஒளிப்பரப்பாகின. இதுவரை பிக் பாஸ் 5 சீசன்கள் டெலிகாஸ்ட் ஆகியுள்ளன. கடந்தாண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 5ல் ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்றார்.
முதலில் இந்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என வதந்திகளும் பரவின. ஆனால் கடைசியில் பிக் பாஸ் சீசன் 6 கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவுள்ளது புரமோ மூலம் உறுதியாகியுள்ளது. மற்ற எல்லா சீசனிலும் நடக்காத ஒன்று இந்த சீசனில் அரங்கேறவுள்ளது. அதாவது இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள பொதுமக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 முதல் புரமோவை வெளியிட்டுள்ளது.