Developed by - Tamilosai
வெலிகமவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த ஜனவரி மாதம் விடுதியில் தங்க வந்தார் என்றும் இரவு உணவுக்குப் பிறகு அவர் முன்பதிவு செய்த அறைக்குச் சென்றதாகவும் விடுதியின் மேலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மரணம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.