தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது

0 224

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு, வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, டுபாய் நோக்கி நேற்று (29) பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில், 95000 அமெரிக்க டொலர், 18000 யூரோ, 37000 சவூதி ரியால் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.