Developed by - Tamilosai
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் கடவுசீட்டுக்கான கேள்வி அதிகரிக்கின்றது.
நாட்டில் கடந்த 8 மாதங்களில் மாத்திரம் 700,000க்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மாத்திரம் கடவுச்சிட்டினை பெற்றுக்கொள்வதற்காக 116,244 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 4000 பேர் கடவுச்சீட்டிற்க்காக விண்ணப்பித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,