தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்பட்ட கழிவுகள் கிழக்கு கடற்கரையில்

0 219

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம் உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் கழிவுகள் கரை ஒதுங்குவதாக பொதுமக்களும், மீனவர்களும், தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்பட்ட காலணிகள் வெற்று போத்தல்கள், குளிர்பான போத்தல்கள், மூங்கில்கள், உள்ளிட்ட பல பொருட்கள் கடலலையில் அள்ளுண்டு கரையொதுங்குவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும், கடற்கரைக்கு வருபவர்களுக்கும் இக்கழிவுகள் பெரும் தடையாகக் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கரையொதுங்கும் சில வெற்றுப் போத்தல்களில் மியன்மார், என ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.