Developed by - Tamilosai
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றின் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் நேற்று சிறைக் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, சில கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் ஏனைய கைதிகளை துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே தங்களது தண்டனையைக் குறைக்குமாறு கலவரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அவர்கள் கூரையிலிருந்து கீழே இறங்க மறுத்துவிட்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்ட பல கைதிகள் ஒரு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
எவ்வாறிருப்பினும் மேலும் பல கைதிகள் இன்னும் சிறையின் கூரையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.