தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெலிக்கடை சிறையில் கலவரம்! பொல்லுகளுடன் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

0 278

வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கைதிகள் தற்போது சிறை வளாகத்திற்குள் சொத்துக்களைச் சேதப்படுத்தி வருவதாகவும், சிறைக் காவலர்கள் பொல்லுகளுடன் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா போன்றவர்கள் 5 வருடங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்ததாகவும், சில கைதிகள் 15 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.