தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இளம் வீராங்கனை காவேரி பிரதீபன் உயிரிழப்பு!

0 204

யாழ்.தேசிய மட்ட வீராங்கனை காவேரி பிரதீபனின் (அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை) மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாரத்தான் ஒட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleybal, Elle இப்படி பல விளையாட்டுக்களில் தேசிய மட்டங்களிலும், மாகாண, மாவட்ட, மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றெடுத்தவர் யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 29 வயதான காவேரி பிரதீபன்.

இவர் கடந்த மூன்று வருடங்களாக Aplastic Anaemia என்ற இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2020 ஆண்டு மேலதிக வைத்திய சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை, பலனின்றி 15.11.2021 அன்றைய தினம்  உயிரிழந்துள்ளார். அவரது சடலம் கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.