தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெடிபொருட்கள் – மீட்பு பணிகள் ஆரபம்..!

0 155

கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் செயலிழந்த நிலையில் துப்பாகிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலையின் பின்பகுதியில் உள்ள காணியிலேயே இவ்வாறு பெருமளவான ஆயுதங்களும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக குறித்த வெடிபொருட்கள் தொடர்பில் நேற்று முந்தினம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலிற்கு அமைவாக தர்மபுரம் பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று இன்று அகழ்வு பணிகளை ஆரம்பித்தனர். குறித்த அகழ்வு பணிகளின்போது ரி 56 ரக துப்பாகிகள்இ வெடி பொருட்கள் என்பன இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவத்தினர் இணைந்து குறித்த அகழ்வு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் ஆகியன துருப்பிடித்து காணப்படுவதாகவும்,அவை செயல் திறண் உள்ளவையா என்பது தொடர்பில் அகழ்வு பணிகள் நிறைவுற்றதன் பின்னர் ஆய்வு செய்யப்பட்டு, நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெடி பொருட்கள் மீட்கப்படும் தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.