தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வீதி விபத்துக்களைக் குறைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சி

0 119

 நாட்டில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக வீதிச் சட்டங்கள் தொடர்பில் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 1,948 பேர் உயிரிழந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

விரைவாக அபராதத்தைச் செலுத்துதல் மற்றும் சாரதிகளின் திறன் தொடர்பான மதிப்பெண் முறைமை உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நடவடிக்கைகளுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் சாரதிகளுக்கு இரண்டு வாரங்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.