தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வீதி விபத்தில் பெண்ணொருவர் பலி

0 26

நேற்றிரவு (8) அனுராதபுரம் -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் கஹடகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

கெப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் உட்பட 8 பேர் காயமடைந்த நிலையில் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது

உயிரிழந்த நபர் ஹொரவ்பொத்தானை – முக்கறவெவ பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண் என தெரியவருகிறது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கஹடகஸ்திகிலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.