தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வீட்டில் இருந்த இளம் தாயும் கைக்குழந்தையும் மாயம்…!

0 111

அங்குருவத்தோட்ட ஊராடுதாவ பிரதேசத்தில் இளம் தாயும் அவரது 11 மாத கைக்குழந்தையும் காணாமல் போயுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது கணவர் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியேறி, அன்று மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பியபோது,

மனைவி மற்றும் மகள் இல்லாததால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

இங்கிரிய பிரதேசத்தில் உள்ள மனைவியின் பெற்றோருடன் தொடர்பு கொண்டும் அவர்கள் வரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி விசாரணை நடத்திய பொலிஸார்,

காணாமல் போன பெண்ணின் நெருங்கிய உறவினரின் முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.