தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வீடுகளில் விளக்கேற்றி வணக்கம் செலுத்தினால் போதும் – கலகொட அத்தே ஞானசார தேரர்

0 264

சர்ச்சைக்குரிய தேரர் எனச் சொல்லப்படும் கலகொட அத்தே ஞானசார தேர இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர், இவ்வாறு கூறியிருந்தார்.

எங்களுக்குத் தெரியும், ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் பிரச்சினை வேறு வகையானது. மக்களுக்கு இருக்கும் பிரச்சினை வேறு வகையானது.

ஆனால் ஊடகவியலாளர்கள், எமது செயலணிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்குப்பட்ட விடயங்களை மாத்திரம் கேட்க வேண்டும். அதற்கு பதிலளிக்க முடியும்.

போராட்டங்கள், யுத்தங்களில் மனிதர்கள் உயிரிழக்கலாம். அது சிங்களவரா, முஸ்லிமா, தமிழரா என்ற பிரச்சினை இல்லை. உயிரிழப்பு அவர் சார்ந்த குடும்பத்திற்குத் தான் பாதிப்பு.

தமது குடும்ப உறுப்பினர்கள் போராட்ட காலத்தில் இறந்திருந்தால் அவர்களை நினைத்து வீடுகளில் விளக்கேற்றி வணக்கம் செலுத்தினால் போதும். அதனை பொது வெளியில் கொண்டுவருவதினால் மேலும் பிரச்சினை தான் உருவாக்கும்.

இந்த நிலையில் அதனைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.