Developed by - Tamilosai
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நடத்தப்படும் போராட்டங்களில் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பறிகொடுத்த எமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரி ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த இடத்தில் புலனாய்வாளர்கள் குவிக்கப்படுகின்றனர்.
மேலும் ஏன் அவர்கள் எம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்படுகிறார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.