Developed by - Tamilosai
2023 -உலக கிண்ணம் நேற்றைய போட்டியின் போது அஞ்சலோ மத்யூஸ் தனது சர்ச்சைக்குரிய ‘டைம் அவுட்’ வெளியேற்றம் குறித்த , நான்காவது நடுவராக இருந்த ஏட்ரியனின் அவதானிப்பு தவறு எனக் காட்டும் காணொளியை வெளியிட்டுள்ளார்.


“நான்காவது நடுவர் தான் இந்த சம்பவத்தில் தவறிழைத்துள்ளார். தலைக்கவசத்தைக் கொடுத்த பின்னும் எனக்கு 5 வினாடிகள் இருந்ததை காணொளி காட்டுகிறது! 4வது நடுவர் இதை சரி செய்ய முடியுமா? நான் தலைக்கவசம் இல்லாமல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று நான் சொல்கிறேன்” என்று அஞ்சலோ மத்யூஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் தனது டைம் அவுட் வெளியேற்றம் குறித்து தனது எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.