தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாய சமூகத்துடன் இணைந்து 16 ஆம் திகதி பாரிய போராட்டம்

0 291

நவம்பர் 16 ஆம் திகதி இரண்டு மில்லியன் விவசாய சமூகத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கு  எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஹரீன், அண்மையில் ஆற்றிய உரையில் விவசாய சமூகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய  கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு கொரோனா தொற்றால் உயிரிழந்த 13 ஆயிரம் குடும்பங்களுக்காக அந்த உரையில் எதையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கவில்லை என்றும் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அர்த்தமற்ற வகையில் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்  குற்றம்சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.