தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

0 40

விவசாய அமைச்சரான மஹிந்த அமரவீர விவசாயிகளுக்கு நெற்செய்கைக்கு தேவையான எரிபொருளை துரிதமாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை விவசாய பணிப்பாளர் நாயகம் விவசாய அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளது. இதனடிப்படையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 217 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பயிர்ச்செய்கைக்கு மேலதிக எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டின் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் எரிபொருள் கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக  தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் கமநல சேவை நிலையங்களின் அனுமதி கடிதத்தை அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சமர்ப்பித்து தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.