Developed by - Tamilosai
க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையைத் தடுத்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்கி, புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பீடைகொல்லிகள் கட்டுப்படுத்தல் சட்டத்தின் 11ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பீடைகொல்லிகள் பதிவாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நன்மை கருதி பீடைகொல்லிகள் தொழிநுட்ப மற்றும் ஆலோசனை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பீடைகொல்லிகள் பதிவாளர் அந்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதிமாலியத்த, கந்தகெட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை தடைசெய்து கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
க்ளைபோசேட்டுக்கு மேலதிகமாக ப்ரொபனில், கார்பரி1, கொளொபைரிபொஸ், கார்போஃபுரன் ஆகிய பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளைபோசேட் பல பயிர்செய்கைகளுக்கான பீடைகொல்லியாக பாவனைக்குட்படுத்தப்பட்டது.
2014ஆம் ஆண்டு அது தடை செய்யப்பட்டதன் பின்னர் தேயிலை தொழிற்துறையில் பாரிய தாக்கம் ஏற்பட்டிருந்தது.