தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாயிகளுக்கு நிதி உதவித் திட்டம் – அரசாங்கம் அறிவிப்பு

0 58

அரை ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட 3 இலட்சம் ரூபா உதவித் திட்டம் ஒன்றை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் விவசாய பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு கம்பளை பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விவசாய நடவடிக்கைகளுக்காக நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 22 இலட்சம் லீற்றர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த உரத் தொகையின் முதல் தொகுதி எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு எடுத்துவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.