தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கோரி மன்னாரில் நாளை மாபெரும் போராட்டம்

0 237

 மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புக்களை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த போராட்டமானது மன்னார் – உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கத்தின்  திட்டமிடாத நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் பாரிய உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோட்டாபய அரசாங்கத்திடம்  உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி இடம்பெறவுள்ள  போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.