தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாயிகளுக்குப் பாதுகாப்புக் கோரி இன்றும் போராட்டம்

0 224

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, இரசாயன  உரத் தட்டுப்பாடு மற்றும் அதிபர் – ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்குத் தீர்வு கோரி தமிழ் முற்போக்குக்  கூட்டணி தலைமையில் ராகலை நகரில் இன்று போராட்டம் இடம்பெற்றது.

இப் போராட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், வேலுகுமார், மயில்வாகனம் உதயகுமார், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும்,  பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ராகலை நகரின் எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு முன்பாக  ஆரம்பமான இப்போராட்டம் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக இராகலை முருகன் ஆலயம் வரை சென்று அங்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதேவ‍ேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும் அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடர்பாகவும்,  பெருந்தோட்ட கம்பனிகளின்  அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி தரும் நோக்குடனும் போராட்டம் இடம்பெற்றது.

இதேவேளை, உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விவசாயிகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் பதுளை மாவட்ட பாராளுமன்ற வடிவேல் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பதுளை நகரில் ஊர்வலம் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.