Developed by - Tamilosai
விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி வடக்கு – கிழக்கில் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதில் ஓர் அங்கமாக யாழ். வலி. கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புத்தூர் மற்றும் உரும்பிராய் கமநல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் 9.15 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றார்.
வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடை செய், விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளைப் போதியளவு கிடைக்க வழி செய், அறுவடை காலத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதியைத் தடை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி வடக்கு -கிழக்கிலுள்ள கமநல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.