தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாயிகளின் பாரிய போராட்டத்தால் பதற்றம்

0 124

விவசாய செயற்பாடுகளுக்காக அரசாங்கம் விரைவில் இரசாயன உரத்தைப் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி,  சேருநுவர  பிரதேச விவசாயிகள் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


சேருநுவரவிலுள்ள அனைத்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும்  ஒன்றிணைந்து, சேருநுவர சந்தியில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


இதனால் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்தும்  சில மணி நேரம் தடைப்பட்டுள்ளது.


ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு, விவசாயம் மேற்கொள்ளத் தேவையான உரத்தை பெற்றுத்தருமாறும் விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வீதியை மறித்து, கொடும்பாவிகளை ஏரித்து விவசாயிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டமையால் சிறிது பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.