தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாயத்துறை அமைச்சின் அனைத்து பதவியிலிருந்தும் புத்தி மரம்பே நீக்கம்!

0 140

 பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ச்செய்கை விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் புத்தி மாரம்பே, விவசாய அமைச்சில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் ஜயசிங்கவுக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

தேசிய விவசாயக் கொள்கை, இலங்கை விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் சிறுதொழில் வியாபார கூட்டுத் திட்டம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

கிளைபோசேட் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்தமைக்காக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்ததாக பேராசிரியர் புத்தி மரம்பே மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பேராசிரியர் புத்தி மரம்பே அரசாங்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.