தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக பலி!

0 65

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி எனும் சிறுமி வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் போடப்பட்டிருந்த சேலையில் கழுத்து இறுகியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தாய் வெளியில் சென்றிருந்ததாகவும் பின்னர் வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்துள்ளதை அவதானித்து, கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார். சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த போதே இவ்வாறு இடம்பெற்றதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் பரிசோதித்த வைத்தியர், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் இன்று காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.