தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விருது வென்ற இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்

0 19

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கிவரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும், பாடல் எழுதுவதிலும், படம் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்சின் அடுத்த பட அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியாகி விருதுகளை வென்ற கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கவுள்ளார். இதில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு கொட்டுக்காளி என்று பெயரிடப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, “ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க ‘டைகர் அவார்ட்’ வென்று, ‘கூழாங்கல்’ திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன். எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.