தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை

0 415

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களது குடும்பத்தினரால் தாக சாந்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் 12 மணியளவில் மட்டக்களப்பு ஊரணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசலுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தந்தையர் தனது மகனுக்கான நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என்றும் கொலை செய்த குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் தனது மகனின் பிறந்த தினத்தை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனது மகனின் கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்த பாலசுந்தரத்தின் தந்தையர் இன்று வரை தனது மகனின் கொலைக்கு நீதியான விசாரணை கிடைக்கவில்லை என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.குறித்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.