தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விமான நிலைய அதிகாரிகளும் ஹர்த்தாலுக்கு ஆதரவு..

0 341

நாளை (06) நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தமது சேவைகளை நிறுத்தப்போவதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட குறித்த சங்கம்,

அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் VIP மற்றும் CIP தரத்திலான செயல்பாடுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நிறுத்துவார்கள் என்று   தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை சேவையில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், பல தொழிற்சங்கங்கள் கடமைகளில் இருந்து விலகி நாளைய ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.