தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விடுதலை புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் பாரிய வேறுபாடுகள் கிடையாது – நாமல்

0 444

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற ஆளும்கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பேசிய அவர், இருதரப்பினரும் அழிவை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள் என கூறினார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என கூறினார்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அனைத்து செயற்திட்டங்களையும் விமர்சிப்பது எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கொள்கை என நாமல் ராஜபக்ஷ சாடினார்.

இந்த விடயத்தில் தமிழிழ விடுதலை புலிகளுக்கும்,மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பகாலத்தில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய கலவரங்களில் ஈடுப்பட்டமையினால் பல இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டதை மக்கள் இன்றும் மறக்கவில்லை என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.