Developed by - Tamilosai
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் நேற்றுடன் 100 நாளை எட்டியுள்ளது. வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த படத்தை, ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர். இந்த நிலையில் நூறாவது நாளை ஏட்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தை குறித்து நடிகர் கமல்ஹாசன் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் நூறாவது நாளை எட்டி இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்! தலைமுறைகள் தாண்டி தன்னை ரசிக்கும் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அத்துடன் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த ஒவ்வொருவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷ்க்கு அன்பும், வாழ்த்துக்களும் என கமல்ஹாசன் தன்னுடைய ஆடியோ பதிவில் பதிவிட்டுள்ளார்.