Developed by - Tamilosai
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
தமிழ் திரையுலகமே பெரியளவில் எதிர்பார்த்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று இருக்கிறது. வரிசையாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் சொதப்பி வந்த நிலையில் விக்ரம் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று தமிழகத்தை தாண்டியும் வசூலை குவித்து வருகிறது.
இதனிடையே விக்ரம் திரைப்படம் வெளியாகி 7 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி இப்படம் உலகளவில் தற்போது வரை ரூ.260 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. வெறும் 7 நாட்களில் இவ்வளவு பெரிய வசூலை குவித்து சாதனை படைத்துள்ள விக்ரம் திரைப்படம் மட்டுமே. இரண்டாவது வார இறுதியில் விக்ரம் திரைப்படம் ரூ. 300 கோடியை தாண்டி விடும் எனவும் நம்பப்படுகிறது.