Developed by - Tamilosai
வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அனுபவமாக கருதப்படும் “நிஷிமுரா” வால் நட்சத்திரத்தை அடுத்த மூன்று நாட்களில் வெறும் கண்களால் பார்க்கக்கூடிய அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.
இதனை பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையர்கள் நாளை(19),புதன்கிழமை(20) மற்றும் வியாழக்கிழமை(21) ஆகிய மூன்று நாட்களும் மாலை 6.30 மணிக்கு தொலைநோக்கியைப் பயன்படுத்தாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
C/2023 P1 என்றும் அழைக்கப்படும் “நிஷிமுரா” வால் நட்சத்திரம் 500 வருடங்களுக்கு முன்பு பூமிக்கு மிக அருகே வந்து சென்றுள்ளது. இந்நிலையில் அது மீண்டும் தற்போது பூமிக்கு அருகே பயணிக்கவுள்ளது.
மணிக்கு 386,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் நிஷிமுரா வால் நட்சத்திரத்தை சூரிய உதயத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு சிறிது நேரத்திற்கு பிறகும் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்நிகழ்வானது மீண்டும் 2455 ஆண்டுகளிலேயே நிகழும் என்பதால் இதுவொரு அரிய வாய்ப்பு என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.