Developed by - Tamilosai
கடந்த மே மாதம் 20ஆம் திகதி துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரை பழைய பகை காரணமாக 6 பேர் கொண்ட குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த 22,35,45,40 வயதுடைய நான்கு பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.