தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வாய்த்தகராறால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

0 13

நேற்று (17) இரவு அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதாவது படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக படகொட சந்தியில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.