Developed by - Tamilosai
2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லது முகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை உள்ளடக்குவது அல்லது அதற்குரிய திருத்தங்களை கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பி.சி படிவங்கள் இம்முறை வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் கடந்த 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஜூன் 15ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.