தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம்

0 446

நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

பூந்தோட்டம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பொதுமகள் அயல் கிராமத்தவர்கள் இளைஞர்கள், பெண்கள்  என பெருமளவானோர்கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் நாட்டில் பொருட்களின் விலைஅதிகரிப்பு காரணமாக இன்று அனைத்து மக்களும் கடும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றதோடு குழந்தைகள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .

எனவே நாட்டையும், மக்களையும் படுகுழியில் தள்ளிய இந்த அரசு உடனடியாக பதவிவிலகவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.