Developed by - Tamilosai
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் வெள்ளைச்சாமி மகேந்திரன் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்தார்,
வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததுடன், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
இதேவேளை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மாதாந்த அமர்வுக்காக கடந்த மாதம் 24 ஆம் திகதி கூடிய போது மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் உப தவிசாளர் வெள்ளைச்சாமி மகேந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, கொவிட் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.