தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வவுனியா ஊடகவியலாளர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு!

0 167

 வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை 26 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வறுமைக்குட்பட்ட மக்களுக்காக உதவும் வவுனியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சமூக ஆர்வலர் அமைப்பு ஒன்று தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.