தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வவுனியாவில் டிப்பர் மோதி 15 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

0 101

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயதுச் சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரிய வருவதாவது:

மதவாச்சி – மன்னார் பிரதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிக்குளம், முதலியார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 வயதுச் சிறுவன் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விபத்தில் செட்டிக்குளம், முகத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆ.சயந்தன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.