Developed by - Tamilosai
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா – கொழும்பு வீதியிலுள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹயஸ் வாகனம் இன்று வியாழக்கிழமை அதிகாலை மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
கொழும்பில் இடம்பெறவிருந்த தமது மகளின் பதிவு திருமணத்திற்காக வவுனியா, தோணிக்கல் பகுதியிலிருந்து சென்ற குடும்பத்தினரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் வாகனச் சாரதி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் என 6 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்கமுக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கல்கமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.