Developed by - Tamilosai
அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களிலும் விசேட பூஜைகளை நடத்திச் செல்ல புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பௌத்தர்கள் பௌர்ணமி நாட்களில் மற்றும் போதி பூஜையின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் வழிபாட்டில் ஈடுபட முடியும்.
கத்தோலிக்க, இஸ்லாம் மற்றும் இந்து பக்தர்கள் விசேட மத வழிபாடுகளின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் கலந்து கொள்ள முடியும்.
இதன்படி, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள் சுகாதார பாதுகாப்பு மற்றும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் குறித்து தேவைப்பட்டால் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டி ஏற்படும்.
திருமணத்தை தவிர ஏனைய விருந்துகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் இன்னும் முற்றாக நீங்கவில்லை என்பதை அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.