தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வல்வையில் பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!

0 527

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா கொவிட் நிலைமை காரணமாக பட்டத் திருவிழா இவ் வருடமும் 2022 நிறுத்தப்படுவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாமல்றாஜபக்ச அழைக்கப்பட ஏற்பாடாகி இருந்த நிலையில் இதற்கு பல எதிர்புக்களி தமிழ் அரசியல் வாதிகளால் வெளியிடப்பட்டுள்ளது இதனால் பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்த பட்டத்திருவிழா இம்முறை நடைபெறமாட்டாது என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

ஆண்டு தோறும் தமிழர் திருநாளான தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் பட்டத்திருவிழா நடத்தப்பட்டு வருகின்றமை தொன்று தொட்ட ஒன்றாக காணப்படுகின்றது.

இந்நிலையில் பட்டத்திருவிழா ஏற்பாட்டு குழுவினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று 05.01.2022 மாலை இடைம்பெற்றிருந்தது. இதன்போது கொரோனா நிலமையினை காரணம் காட்டி பட்டத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டத்திருவிழாவிற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னால் வடமாகாணசபை தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் நாமல்றாஜபக்ச கலந்துகொள்ளவுள்ளமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.