தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வல்வெட்டித்துறை நகர சபை பட்ஜெட் தோற்கடிப்பு

0 127

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்  இன்று புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது. 
இந்நிலையில் குறித்த பாதீடு  வாக்கெடுப்பில் ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை, 14 ஆம் நாள் மீண்டும் பாதீடு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமும் பாதீடு தோல்வியடைந்தால் , தவிசாளர் பதவியிழக்க நேரிடும்.

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள்  தவிசாளரான  கோணலிங்கம் கருணாந்தராசா (வயது -76) கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.

 இந்நிலையில் கடந்த செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கே.சதீஸை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து , சுயேட்சைக் குழு உறுப்பினரான எஸ்.செல்வேந்திரா புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் பதவியேற்று இரண்டு மாத கால பகுதி முடிவுறாத நிலையில் அவரது முதலாவது பாதீடு தோற்கடிக்கப்பட்டது. 

14 நாளில் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் , அவர் தனது தவிசாளர் பதவியை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.