தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு – சுரேன் ராகவன் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

0 281

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், தமக்கு 2021 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி 10 மில்லியன் ரூபாவில் இரண்டு மில்லியன் ரூபாவை முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைக்களுக்காக ஒதுக்கியுள்ளார்.

ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 4 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்த நிலையில் மேலும் 2 மில்லியன் ரூபாவை ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஆலய நிர்வாகசபைத் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒதுக்கியுள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் 14 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன் மக்களுக்கான பல அபிவிருத்தித் திட்டங்களும் உள்ளடங்குகின்றன.

இதேவேளை மன்னார் மாவட்டத்திற்கு 1.25 மில்லியனும் வவுனியா மாவட்டத்திற்கு 1.25 .மில்லியனும் கொழும்பு மாவட்டத்திற்கு 1 மில்லியனும் கம்பஹா மாவட்டத்திற்கு 0.5 மில்லியன் ரூபாவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.