Developed by - Tamilosai
அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக 220 இலட்சம் மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது நாட்டு மக்களை 70/77 ஆண்டு வரிசை யுகத்துக்கு கொண்டுசெல்லவா ? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி நேரத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஓய்வூதியர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்குமாறு அரச ஓய்வூதியர்கள் கடந்த இரண்டு வருடமாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர்.
ஆனால் அரசாங்கம் இவர்களின் கோரிக்கைக்கு இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையையும் அதிகரித்திருக்கின்றது.
அதனால் ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டுசெல்வதற்கு மிகவும் கஷ்டப்படப்போகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.