தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் -மின்சார சபை

0 236

இனி வரும் காலங்களில் மாதாந்த மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையிடம் இருந்து 300 மெகாவோட் மின்சாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் முயல்வதாக சுட்டிக்காட்டினார்.

தனியாரிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு 95 பில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் அரசாங்கம் பிரச்சினையை தீவிரப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

எனினும் தனியார் மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுடன் அரசாங்கம் ஒருபோதும் சாதகமான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என்று குறிப்பிட்டார்.

ஏப்ரலில் எதிர்பார்க்கப்படும் மழையின் மூலம் நீர்த்தேக்கங்களை நிரப்ப முடியும் என்று அரசாங்கம் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலைகளை விரைவில் கட்டாயம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஐஓசி நிறுவனம், நேற்று முன்தினம் நள்ளிரவுமுதல் பெற்றோலின் விலையை 7 ரூபாயாலும் டீசலில் விலையை 3 ரூபாயாலும் அதிகரித்திருந்தது.

எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காது என்று விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கூறியிருந்தபோதிலும் அதிகரிக்காது என்றால் கட்டாயம் அதிகரிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.