Developed by - Tamilosai
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார்.
நாளை வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை இடம்பெறுவதால் பொது விடுமுறை நாளாகும். அதனால் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதனால் பதில் நாளாக வரும் நவம்பர் 13 ஆம் சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என்று மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.