தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வடமாகாண ஆளுநரின் அதிரடி பதில்!

0 156

பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை சுதந்திரங்களை பயன்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட முடியாது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (06) வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ,

” வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர். இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் டீசேர்ட் கொள்வனவிற்காக பல இலட்சம் ரூபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்” என தெரிவித்து இருந்தார்.

அந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் செய்தி குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

ஆளுநரின் ஊழியர்கள், மாகாண நியமன ஊழியர்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் நீதியான சமுதாயத்தை நம்புகிறார். அதற்காக நேர்மையாக பணியாற்றுகிறார்.

இங்குள்ள சிலர் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை சுதந்திரங்கள் உண்டு, அவற்றினை அவர்கள் தவறாக பயன்படுத்த கூடாது. அந்த சுதந்திரங்களை பயன்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.