தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வடமாகாணம் உட்பட நாட்டில் மழையும் காற்றும் அதிகரிக்கும்

0 57

நாட்டில் மழையுடனான வானிலை நாளையும் தொடரும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை காணப்படும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கடற் கரைகளை அண்டிய பிரதேசங்களில்  காற்றின் வேகமானது 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்

இதன் காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.